என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய மீனவர்கள்"
பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.
பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் எழுத்துபூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:-
மத்திய அரசு எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக இருந்த 1,725 மீனவர்கள் உள்பட இந்தியர்கள் 1,749 பேர் விடுவிக்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் மீனவர்களின் 57 படகுகளும் மீட்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் மீனவர்கள் உள்பட 179 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அந்த மாநில அரசுகள் மற்றும் மீனவர் அமைப்புகள் எழுதிய கடிதம் எங்களுக்கு வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.
வளைகுடா நாடுகளில் 4 ஆயிரத்து 705 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளில் தண்டனை காலம் முடிந்தும் 434 இந்தியர்கள் சிறையில் இருக்கின்றனர். இதில் 396 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுவாழ் இந்திய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரால் கொடுமை செய்யப்படுவது தொடர்பாக 5 ஆயிரத்து 379 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அராபிய கடலில் மீன் பிடிக்கும்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எதிர்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கைது செய்வது தொடர்ந்து வருகிறது.
அவ்வகையில், இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் கடலோர காவல் படை கைது செய்தனர். அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கராச்சி துறைமுகம் பகுதியில் உள்ள காவல் நிலைய போலீசார் கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடைத்து வைத்துள்ளனர். #Indianfishermen #Pakistanarrests
குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் இருந்து 2 படகுகளில் 16 மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். #IndianFishermen #Pakistan
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
அவ்வாறு கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது.
சென்னை:
தமிழக மீனவர்கள் 21 பேர் ஈரான் நாட்டிற்கு மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று விட்டு கடந்த 7 மாதமாக சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டனர்.
உணவு, தங்குமிடம் இல்லாமல் நடுரோட்டில் கிடந்தனர். தங்களுக்கு வேலை வேண்டாம், இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று மீனவர்கள் கேட்ட போது விசாவை ரத்து செய்து இந்தியா திரும்ப வேண்டுமானால் அதற்கு ரூ.50 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் அவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தி.மு.க. எம்.பி. கனிமொழியும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களை மீட்டு அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈரான் நாட்டு தூதரக உதவியுடன் 21 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது.
மேலும் இந்திய தூதரகமே மீனவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து ஈரானில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு அனுப்பி வைத்தது.
தமிழக மீனவர்கள் 21 பேரும் அதிகாலை சென்னை வந்து சேர்த்தனர். விமான நிலையத்தில் அதிகாரிகள், உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கைளைச் சேர்ந்த மீனவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டு முதலாளி ஒருவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் கடந்த 6 மாதங்களாக ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு 6 மாதமாக மீன்பிடித்ததற்கான உரிய கூலியை முறையாக வழங்காமலும், போதுமான உணவு வழங்காமலும் ஈரான் நாட்டு முதலாளியால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதனால், தங்க இடமின்றி, உணவு இன்றி அவர்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த தகவலை மீனவர்கள் தமிழகத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தூதரகம் தலையிட்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.
அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை கடந்த ஜூன் மாதம் வலியுறுத்தினார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் வெளியுறுவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்த்தித்து 21 மீனவர்கள் மீட்பு குறித்து பேசினார்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஈரானில் தனித்து விடப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 21 இந்திய மீனவர்கள் இந்திய தூத்தரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 3-ம் தேதி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்